நிகழ்வு-செய்தி

கடற்படைக் களப் பயிற்சியின் அம்பிபியஸ் தாக்குதல் பயிற்சி மொல்லிக்குளம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் மரைன் படையணியால் மூன்றாவது (03) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட Marines Field Training Exercise Blue Whale – 2024 பயிற்சி இன்று (2024 அக்டோபர் 10,) காலை வடமேற்கு கடற்படை கட்டளையின் மொல்லிக்குளம் கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

10 Oct 2024

அமெரிக்க பசிபிக் படையணியின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உலகின் மிகப்பெரிய கடற்படையான அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் Stephen T. Koehler இன்று (2024 அக்டோபர் 10) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

10 Oct 2024

இத்தாலிய கடற்படையின் ‘PPA MONTECUCCOLI’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இத்தாலிய கடற்படையின் 'PPA MONTECUCCOLI' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 அக்டோபர் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் கடற்படை மரபுப்படி குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

10 Oct 2024

நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் அகில இலங்கை வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடர்

போதைப்பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்திற்காக குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறை வலுவூட்டல் என்ற உன்னதமான கருப்பொருளை மனதில் கொண்டு, நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் பாடசாலைக் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினருக்காக வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரொன்று 2024 நவம்பர் மாத்த்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான வடிவமைப்புகள் 2024 அக்டோபர் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

09 Oct 2024

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் பயிற்சி பாய்மர போர்க்கப்பலான 'PO LANG' உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான(Chinese People’s Liberation Army Navy Sail Training Warship) 'PO LANG' இன்று (2024 அக்டோபர் 8,) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

08 Oct 2024

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் 2024 தொடங்கியது

இலங்கை தொண்டர் கடற்படையின் 2024 வருடாந்த பயிற்சி முகாமின் ஆரம்ப நிகழ்வு 2024 ஒக்டோபர் 04 ஆம் திகதி வெலிசறையில் உள்ள தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் தொண்டர் கடற்படையின் கட்டளை அதிகாரி கொமடோர் சுசந்த தர்மசிறி அவர்களின் அழைப்பின் பேரில் தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண தலைமையில் நடைபெற்றது.

07 Oct 2024

கடற்படைக் களப் பயிற்சி “Marines Field Training Exercise Blue Whale - 2024” தொடங்கியது

இலங்கை கடற்படையின் மரைன் படையணியால் மூன்றாவது (03) தடவையாக ஏற்பாடு செய்யப்படுகின்ற “Marines Field Training Exercise Blue Whale - 2024” கடற்படைக் களப் பயிற்சி 2024 ஒக்டோபர் 05 ஆம் திகதி திருகோணமலை தெற்கு சாம்பூரில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவன வளாகத்தில் ஆரம்பமானதுடன் 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை வடமேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் இந்தப் பயிற்சியை நடத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

07 Oct 2024

கடற்படையின் பங்களிப்புடன் புஸ்ஸ மற்றும் மெதில்ல கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

புஸ்ஸ மற்றும் மெதில்ல பகுதிகளில் கடற்கரைகளை மையமாக் கொண்டு இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியொன்று இன்று (05 அக்டோபர் 2024) செயல்படுத்தப்பட்டது.

05 Oct 2024

கௌரவ ஜனாதிபதியை கடற்படைத் தளபதி மரியாதையுடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கையின் முப்படைகளின் சேனாதிபதியும், இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியுமான, அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களை இன்று (2024 ஒக்டோபர் 04) ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தம் முதல் சந்திப்பை மேற்கொண்டார்.

05 Oct 2024

கடற்படை நலத்துறை பிரிவால் இரண்டு ஊனமுற்ற கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு 02 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது

யுத்தத்தின் போது ஊனமுற்ற இரண்டு கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மடிக்கணினிகள் Laptop (02) கடற்படை நலத்துறை பிரிவால் வழங்கப்பட்டது. வைஸ் அட்மிரல் எஸ்.எம்.பி.வீரசேகர (ஓய்வு) அவர்களால் இலங்கை கடற்படை நலன்புரி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இந்த மடிக்கணினிகள் Laptop 2024 ஒக்டோபர் 03 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது, பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் பிரியால் விதானகேவினால் சிறுவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

03 Oct 2024