நிகழ்வு-செய்தி
தேசிய நீரியல் தினம் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் உலக நீரியல் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது
ஜூன் 21 ஆம் திகதி உலக நீரியல் தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை நீரியல் அலுவலக சமூகத்தினருடன் இணைந்து இன்று (2025 ஜூன் 24) வெலிசரவில் உள்ள Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீரியல் துறைத் தலைவர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் உலக நீரியல் தினத்தைக் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
24 Jun 2025
கதிர்காம பாத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான கடற்படையின் சமூக பணி
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் வரையிலான வருடாந்திர பாத யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்குத் குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான வழியில் தேவையான வசதிகளை வழங்கும் பணியானது இலங்கை கடற்படைனால் 2025 ஜூன் 20 அன்று ஆரம்பமானதுடன், இந்த நடவடிக்கைகளை கண்காணித்து பாத யாத்திதரையில் கலந்துக்கொண்ட கடற்படைத் தளபதி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சேவைகளை தொடர்ந்து வழங்க கடற்படைத் தளபதி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
24 Jun 2025
கடற்படைத் தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 20 முதல் 22 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அங்கு கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்த்துடன் அந்த நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த தேவையான வழிமுறைகளை வழங்கினார். மேலும், கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கடற்படையின் பொறுப்புகள் மற்றும் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து விளக்கினார்.
23 Jun 2025
இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற ஆலோசகரான லெப்டினன்ட் கமாண்டர் (ஆலோசகர்) சோமசிறி தேவேந்திர காலமானார்
இலங்கை கடற்படைக்கு அறிவு, திறன்கள் மற்றும் நல்ல அணுகுமுறைகள் கொண்ட தலைவர்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான லெப்டினன்ட் கமாண்டர் (ஆலோசகர்) சோமசிறி தேவேந்திர, 2025 ஜூன் 19 அன்று காலமானார்.
22 Jun 2025
கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சியை முடித்த தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த 32 மாலுமிகள் பிரியாவிடைப் பெற்றுச் சென்றனர்
வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் 22 வது தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்த முப்பத்திரண்டு (32) தொழில்நுட்ப மாலுமிகளின் பிரியாவிடை நிகழ்வு 2025 ஜூன் 20 ஆம் திகதி வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில், நிறுவனத்தின் ஆய்வுகள் இயக்குநர் கெப்டன் ஹேமஜித் பண்டாரவின் அழைப்பின் பேரில், கடற்படை பொறியியல் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
21 Jun 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் தபுத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெல்ஹிரியாவ மற்றும் கோன் வாவி ஆகிய பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூன் 20 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
21 Jun 2025
கடலில் எண்ணெய் கசிவை நிர்வகிப்பது குறித்த கூட்டுப் பயிற்சி காங்கேசன்துறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் வலயத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் உடனடியாக பதிலளிப்புக்கான தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் கடல் வலயத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஏற்பாடு செய்த கூட்டுப் பயிற்சி, 2025 ஜூன் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் காங்கேசன்துறை துறைமுகத்தின் 'PH' இறங்குத்துறையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Jun 2025
கடற்படையினரால் வடக்கில் உள்ள மீனவ சமூகத்தை ஆபத்தான சுகாதாரம் மற்றும் அவசர நோய் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத் திட்டம்
அரச கோட்ப்பாடுகளுக்கு அமைவாக சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படைத் திணைக்களம் மற்றும் மீன்வள, நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடலில் சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு அறிவூட்டவும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு செயற்திட்டத்தை 2025 ஜூன் 11 முதல் 18 வரை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் கஞ்சதேவ மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் கோதைம்பரவில் இந்தப் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Jun 2025
வடமேற்கு கடற்படை கட்டளையில் கடற்படையினரிற்க்கும் பொதுமக்களிற்கும் விசேட நடமாடும் பல் மருத்துவ சிகிச்சைகள்
இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் மருத்துவ சிகிச்சைகள் 2025 ஜூன் 03 முதல் 07 வரை வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள மஹாவ, கும்புக்கெட்டே, முந்தலம், கொட்டுகச்சிய மற்றும் கங்கே வாடய ஆகிய பகுதிகளை உள்ளடக்கியவாறு நடைப்பெற்றது.
21 Jun 2025
இலங்கை மருத்துவமனை சேவைகள் கவுன்சிலின் தலைமையில் வெலிசர கடற்படை பொது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது
இலங்கை மருத்துவமனை சேவைகள் கவுன்சிலின் இயக்குநர் வணக்கத்திற்குரிய சாஸ்திரபதி பண்டித ராஜவெல்லே சுபூதி தேரரின் தலைமையிலான சமூக சேவை திட்டத்தின் கீழ், மருத்துவமனை உபகரணங்கள் வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் பொது மருத்துவமனைக்கு 2025 ஜூன் 17 ஆம் திகதி மருத்துவமனை வளாகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கப்பட்டன.
20 Jun 2025


