நிகழ்வு-செய்தி
பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகடமியின் அதிகாரிகள் குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் ஆயுதப்படைகளின் பாடநெறி - 2024 இல் கல்வி பயிலும் இருபத்தொரு (21) மாணவ அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழிய உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் (2024 செப்டம்பர் 18) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன் அங்கு, பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Mohammad Shaheenul Haque மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.
18 Sep 2024
விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த 32 கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டது

கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் இருபத்தி எட்டாவது (28) தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் இருபத்தி எட்டு (28) மாலுமிகளுக்கு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம் கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் 2024 செப்டெம்பர் 14 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தலைமையில் பெருமையுடன் நடைபெற்றது.
15 Sep 2024
கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி இன்று (2024 செப்டம்பர் 14,) வட மத்திய கடற்படை கட்டளை தலைமை வளாகத்தில் இடம்பெற்றது.
14 Sep 2024
சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால், 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, காலி தேவா மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
14 Sep 2024
ரியர் அட்மிரல் பூஜித விதான கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்

36 வருட கால சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் பூஜித விதான இலங்கை கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 செப்டம்பர் 13) ஓய்வு பெற்றார்.
13 Sep 2024
இராஜரீகமான இலங்கை கடற்படையின் கடற்படை வீரர் பி.ஏ.டி.விஜேதிலக (ஓய்வு) கடற்படை தளபதியை சந்தித்தார்

இராஜரீகமான இலங்கை கடற்படையில் கடமையாற்றிய கடற்படை வீரர் பி.ஏ.டி.விஜேதிலக (ஓய்வு) இன்று (2024 செப்டெம்பர் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
12 Sep 2024
சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடன் (Marine Environment Protection Authority - MEPA) இணைந்து, 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, சின்ன முகத்துவாரம் மற்றும் ஆருகம்பே கடற்கரையில் 2024 செப்டம்பர் மாதம் 10 மற்றும் 11, தினங்களில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
12 Sep 2024
கிரிந்தஓய கடற்படை இணைப்பில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ், கிரிந்திஓயா கடற்படை வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2024 செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
11 Sep 2024
திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கணபதி சிலையை கொண்ட தேர்த்திருவிழா கடற்படை கப்பல்துறை வளாகத்தில் மற்றும் திருகோணமலை நகரத்தை மையமாகக் கொண்டு 2024 செப்டெம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
09 Sep 2024
கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் புகழ்பெற்ற தளபதியான லெப்டினன்ட் கமாண்டர் (பயிற்றுவிப்பாளர்) சோமசிறி தேவேந்திர அவர்களுக்கு (ஓய்வு பெற்ற) கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் பாராட்டு விழா இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் ஆறாவது கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய லெப்டினன்ட் கமாண்டர் (பயிற்றுவிப்பாளர்) சோமசிறி தேவேந்திர (ஓய்வு பெற்ற) அவர்களுக்கு பாராட்டு விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் இன்று (2024 செப்டம்பர் 08), கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில், அட்மிரல் வசந்த கர்ணாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
08 Sep 2024