நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கடலாமை குட்டிகளை கடலுக்கு விடுவித்துள்ளது

அழிந்து வரும் விலங்குகளின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகளைக் கொண்டுவருவதில் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது.
30 Jan 2020
கேரள கஞ்சா பொதியொன்று கைதுசெய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 29 ஆம் திகதி கிலினோச்சி பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 01 கிலோ மற்றும் 900 கிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியது.
30 Jan 2020
சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரலி 29 ஆம் திகதி யாழ்ப்பாணம், கீரமலை, மெர்சன்குடா பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
30 Jan 2020
நான்கு கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இந்தியர்கள் நால்வர் கைது

இலங்கை கடற்படை 2020 ஜனவரி 29 ஆம் திகதி குதிரமலை கடல் பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது கடல் வழியாக கடத்தப்பட்ட தங்கத்துடன் 04 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
30 Jan 2020
மறைக்கப்பட்ட வெடிபொருட்கள் பொதியொன்று கடற்படையால் மீட்பு

2020 ஜனவரி 29 ஆம் திகதி திருகோணமலை எரக்கண்டி கடற்கரையில் இலங்கை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பாறைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பொதியொன்று கண்டுபிடித்தனர்.
30 Jan 2020
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து 18 கையெறி குண்டுகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 29 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சாலையின் அருகே தரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 18 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
30 Jan 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 28 ஆம் திகதி முல்லிகுளம் கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
29 Jan 2020
வலையில் சிக்கி இருந்த அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடலாமை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜனவரி 28 ஆம் திகதி கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கு கடல் பகுதியில் மீன் பிடி வலையில் சிக்கி இருந்த ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடலாமையை கடற்படை மீட்டுள்ளது.
29 Jan 2020
கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 28 ஆம் திகதி மன்னார் சாந்திபுரம் பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் நடத்திய சோதனை நடவடிக்கையின் பொது கேரள கஞ்சா கொண்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jan 2020
வெற்றிகரமான விஜயத்தின் பின் பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்கள் தாயாகம் திரும்பின

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ்(Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 ஜனவரி 29) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
29 Jan 2020