நிகழ்வு-செய்தி
இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்தகடற்படை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிக் கிரியைகள் இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் நடைபெற்றது

2024 ஜூன் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்டை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிச் சடங்கு 2024 ஜூன் 27 ஆம் திகதி இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் இப்பாகமுவ ஹிபவ்வ பொது மயானத்தில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
28 Jun 2024
தெல்கொட தெமாகலகம மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் உத்தியோகபூர்வ பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு கடற்படை தளபதி தலைமையில் இடம்பெற்றது

தெல்கொட, தெமாலகம மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் மாணவர் தலைவர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு 2024 ஜூன் 27 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் குறித்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
28 Jun 2024
கடற்படையின் செயல்பாட்டு திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் சேவை வாகனத்தை அறிமுகப்படுத்துதல்

கடற்படையின் செயற்திறன் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட முதலாவது நடமாடும் சேவை வாகனத்தின் அறிமுக விழா இன்று (2024 ஜூன் 27,) வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில், இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னா நிறுவனத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
27 Jun 2024
கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன் பலப்பிட்டி மடு கங்கையில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை கடற்படை தளபதி தலைமையில் அலங்கரிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் தொழிநுட்பப் பங்களிப்புடன் பலபிட்டிய மடு கங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரை, 'ஸ்வெஜின்' விகாரை என பெயரிடப்பட்டது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் 2024 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி மாண்புமிகு மகா சங்கத்தினரின் ஆசியுடன் பலபிட்டிய மடு கங்கையில் திறந்து வைக்கப்பட்டது.
27 Jun 2024
உலக இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் உலக பௌத்த முன்னணி ஆகியவற்றின் வருடாந்த மாநாடுகளை யாழ்ப்பாணம் நாகதீப புராண ராஜ மகா விகாரையில் நடாத்துவதற்கு கடற்படையின் உதவி

உலக இளம் பௌத்த சங்கத்தின் 20வது பொது மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 05வது வருட மாநாடு நாகதீப புராண ரஜ மகா விஹாரஸ்தானத்தில் வணக்கத்திற்குரிய நவதாகலை பதுமகித்தி திஸ்ஸ தேரர் தலைமையில், 2024 ஜூன் 22ம் திகதி அன்று நாகதீப புராண ராஜ மகா விகாரையில் நடைபெற்றுவதற்கு, இலங்கை கடற்படை ஆதரவளித்தது.
24 Jun 2024
இந்திய கடற்படைக் கப்பல் INS 'KAMORTA' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுச் சென்றது

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக திருகோணமலை துறைமுகத்திலிருந்து தீவுக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான INS 'KAMORTA' கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை கடற்படை கப்பல்கள் சமுதுராவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (ஜூன் 23, 2024) தீவை விட்டு புறப்பட்டது. குறித்த கப்பலுக்கு, திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
23 Jun 2024
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு வெளியேறியது

2024 ஜூன் 20, ம் திகதி அன்று உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ‘SAMIDARE (DD – 106)’ கப்பல், இலங்கை கடற்படைக் கப்பலுடனான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் இணைந்து கடற்படையின் கூட்டுப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இன்று (2024 ஜூன் 22,) தீவுக்குப் புறப்பட்டது. மேலும், கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
22 Jun 2024
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு கடற்படையின் நடமாடும் பல் மருத்துவ சேவை

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படையினர் வட மத்திய கடற்படை கட்டளையில் 2024 ஜூன் 13, 14, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கடற்படை வீரர்களுக்கு நடமாடும் பல் சேவையொன்று மேற்கொண்டனர்.
21 Jun 2024
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் ‘SAMIDARE (DD – 106)’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஜூன் 20) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
20 Jun 2024
கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 ஜூன் 19,) வடக்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
19 Jun 2024