நிகழ்வு-செய்தி

‘யொவுன் புரய – 2019’ கல்வி வர்த்தக நிகழ்ச்சித்திட்டத்துக்காக கடற்படையின் பங்களிப்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்துகின்ற யொவுன் புரய நிகழ்ச்சித்திட்டம் 10 வது முறையாக ஹம்பாந்தோட்டை வீரவில பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி மாலை கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

02 Apr 2019

பிரித்தானிய கடற்படைக் கப்பல் இலங்கை வருகை

பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான "மொன்ட்ரோஸ்" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஏப்ரல், 02) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரித்தானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

02 Apr 2019

இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் அமைந்துள்ள கடற்படை மருத்துவமனை கடற்படை வைத்தியசாலை ( தென் கிழக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது

தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் அமைந்துள்ள கடற்படை மருத்துவமனை புதுபிக்கப்பட்ட பின் தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில அவர்களினால் கடற்படை வைத்தியசாலை (தென் கிழக்கு) என்றாக இன்று (ஏப்ரில் 01) பெயரிடப்பட்டுள்ளது.

01 Apr 2019

கொமாண்டர் ஜனக ஹெட்டிஆரச்சி இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர கப்பலின் கட்டளைத்தளபதியாக கடமைகளை ஏற்றார்

இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்றான இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர கப்பலின் புதிய கட்டளைத்தளபதியாக கொமாண்டர் ஜனக ஹெட்டிஆரச்சி இன்று (ஏப்ரல் 01) கடமைகளை ஏற்றார்.

01 Apr 2019

நீரில் முழ்கியவரின் சடலம் கடற்படையினரால் மீட்பு

யட்டோவிட, பெலிகஹ பாதையில் உள்ள நதியொன்றில் முழ்கியவரின் சடலத்தினை மீட்க இலங்கை கடற்படையினர் நேற்று (மார்ச் 31) உதவியளித்துள்ளதுடன் அதன் பிரகாரமாக இன்று காலை குறித்த நபரின் சடலத்தை கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளன.

01 Apr 2019

910 கிராம் கன்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் ஆருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து நேற்று (மார்ச் 31)பொத்துவில் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 910 கிராம் கன்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

01 Apr 2019

சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த நான்கு (04) நைஜீரியர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் நேற்று (மார்ச் 31) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மன்னார் கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் நான்கு (04) நைஜீரியர்கள் மற்றும் இலங்கையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

01 Apr 2019

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (மார்ச், 31) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

31 Mar 2019

கடற்படையினரினால் மேலும் 1057.42 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த மார்ச் 29 ஆம் திகதி தலைமன்னார்,கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 2026.84 கிலோ கிராம் புகையிலையுடன் நாங்கு பேர் (04) கைதுசெய்யப்பபட்டன.

31 Mar 2019

கடற்படையினரால் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண (HADR) நிகழ்ச்சித்திட்டம்

புத்தளம் கங்கேவாடிய எலுவான்குளம் பிரதேசத்திலுள்ள அதிவிரைவு தாக்குதல் படகுகள் தலைமையகம், இந்து – பசுபிக் எண்டீவர் – 2019 உடன் இணைந்து கூட்டு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண (HADR) பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை புதன்கிழமையன்று (மார்ச், 27) நடாத்தியுள்ளது.

28 Mar 2019