நிகழ்வு-செய்தி

‘USS Santa Barbara’ தீவை விட்டு புறப்பட்டது

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’ (LCS32) இன்று (2025 ஆகஸ்ட் 21) தீவிலிருந்து புறப்பட்டது, மேலும், கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

21 Aug 2025

‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ திருகோணமலை செண்டி பே கடற்கரையில் ஆரம்பமாகிறது

வெளிநாட்டு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், விளையாட்டு மூலம் கட்டமைக்கப்பட்ட சர்வதேச உறவுகள் மூலம் கடல்சார் திறமையின் சிறப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கை கடற்படையின், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் ஐந்தாவது (05) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ பாய்மரப் போட்டி, 2025 ஆகஸ்ட் 20 அன்று திருகோணமலை செண்டி பே கடற்கரையில், பயிற்சி பெறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடற்படை அதிகாரிகளின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.

21 Aug 2025

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்தும் கூட்டுப் பயிற்சி SLINEX-25 வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12) இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX -25, இலங்கையின் மேற்கே கொழும்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 2025 ஆகஸ்ட் 18 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

19 Aug 2025

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பழுதடைந்த மதகை சரிசெய்ய கடற்படை சுழியோடிகளின் பங்களிப்பு

அனுராதபுரத்தில் உள்ள இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் செயல்படாத மதகை பழுதுபார்த்து மீட்டெடுக்க கடற்படை 2025 ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் சுழியோடல் நடவடிக்கைகளின் மூலம் கடற்படை தனது உதவியை வழங்கியது.

18 Aug 2025

இலங்கை-இந்தியா இருதரப்பு கடற்படைப் பயிற்சியின் கடல் அத்தியாயம் ஆரம்பமாகியது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12) இருதரப்பு கடற்படைப் பயிற்சியின் (SLINEX - 25) கடல் அத்தியாயம் இன்று (2025ஆகஸ்ட் 17) இது இலங்கையின் மேற்கு கடற்கரையில், கொழும்புக்கு அப்பால் ஆரம்பமானது.

17 Aug 2025

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Santa Barbara’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32) இன்று (2025 ஆகஸ்ட் 16) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.

16 Aug 2025

இலங்கை-இந்தியா இருதரப்பு கடற்படைப் பயிற்சி (SLINEX-25) கொழும்பில் ஆரம்பமாகியது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12) இருதரப்பு கடற்படைப் பயிற்சி (SLINEX - 25) இன்று (2025ஆகஸ்ட் 14) கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகுவில், இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் Dr. Satyanjal Pandey அவர்களின் தலைமையிலும், கடற்படையின் இயக்குநர் ஜெனரல் செயல்பாடு ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் பங்கேற்பிலும் தொடங்கப்பட்டது.

14 Aug 2025

SLINEX - 25வது இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ‘INS Jyoti’ மற்றும் ‘INS Rana’ ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12வது) இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் (SLINEX – 25) பங்கேற்க இந்திய கடற்படைக் கப்பல்களான ‘INS Jyoti’ மற்றும் ‘INS Rana’ ஆகிய கப்பல்கள் இன்று (2025 ஆகஸ்ட் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன, மேலும் இலங்கை கடற்படையினரால் கப்பல்கள் கடற்படை மரபுகளின்படி வரவேற்கப்பட்டன.

14 Aug 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத் தி ன் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கெகிராவ பிரதேச செயலகத்தில் உள்ள ஒலுகரந்த கிராமத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

14 Aug 2025

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

14 Aug 2025