நிகழ்வு-செய்தி
முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைமையக கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது

அக்குரேகொட முப்படைத் தலைமையக கட்டிடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைமையக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2023 ஆகஸ்ட் 17) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.
17 Aug 2023
கொமடோர் ஜகத் லியனகமகே கடற்படையின் வரவு செலவு மற்றும் நிதிக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்

கொமடோர் ஜகத் லியனகமகே, இலங்கை கடற்படையின் வரவு செலவு மற்றும் நிதிக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக இன்று (2023 ஆகஸ்ட் 15,) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி அலுவலகத்தில் பதவியேற்றார்.
15 Aug 2023
இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்பட்ட ஊர்காவற்துறை செட்டிப்புலம் ஆரம்ப பாடசாலையின் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், கொழும்பு றோயல் கல்லூரியின் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முன்னாள் மாணவர் அறக்கட்டளை மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் டாக்டர். ஜே.ஐ.டி. ராஜய்யா (Dr. JIT Rajiyah) அவர்களின் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்ட ஊர்காவற்துறை செட்டிப்புலம் தமிழ் ஆரம்ப பாடசாலையின் வகுப்பறைகள் கட்டிடம் மற்றும் பிற அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் தலைமையில் 2023 ஆகஸ்ட் 14 ஆம் திகதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
15 Aug 2023
ரியர் அட்மிரல் ரஜிந்த சேரம் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ரஜிந்த சேரம் தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 ஆகஸ்ட் 15) ஓய்வு பெற்றார்.
15 Aug 2023
இந்து-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு - 2023 கொழும்பில் தொடங்கியது

அமெரிக்க இந்து-பசிபிக் கடல்சார் கட்டளை (US Indo – Pacific Command - INDOPACOM), இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்து-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு – 2023 (Indo-Pacific Environmental Security Forum-IPESF) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (2023 ஆகஸ்ட் 14) தொடங்கியதுடன் இதன் தொடக்க விழா இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவன் விஜேவர்தன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
14 Aug 2023
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கும் நிகழ்ச்சியொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத் திட்டங்களின் கீழ், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த மாற்று மையத்தின் இரத்தத் தேவையை நிரப்பும் நோக்கில் ஏற்பாடு செய்த இரத்த தானம் நிகழ்ச்சியொன்று 2023 ஆகஸ்ட் 12 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான தலைமன்னார் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிறுவனத்தில் நடைபெற்றது.
13 Aug 2023
சீன மக்கள் குடியரசின் ‘HAI YANG 24 HAO’ போர்க்கப்பல் தீவை விட்டு புறப்பட்டது

2023 ஆகஸ்ட் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த 'HAI YANG 24 HAO' என்ற போர்க்கப்பல், உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (2023 ஆகஸ்ட் 12) தீவை விட்டு புறப்பட்டுள்ளது.
13 Aug 2023
கல்பிட்டி, தலவில புனித அன்னாள் தேவாலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கல்பிட்டி தலவில புனித அன்னாள் தேவாலயத்தில் நடைபெற்ற மாலை ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு தேவாலயத்தின் பாதிரியார் அதிமேதகு லைலி பெர்னாண்டோவைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
05 Aug 2023
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஆகஸ்ட் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார், மேற்படி குறித்த கட்டளையினால் மேற்கொள்ளப்படுகின்ற முக்கிய அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் மற்றும் செயற்பாட்டு விடயங்களின் முன்னேற்றங்கள் குறித்து அவதானித்த கடற்படை தளபதி இலங்கை கடற்படையின் செயல்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மாலுமிகளை உரையாற்றினார்.
04 Aug 2023
இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2023 ஜூலை 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இலங்கை கடற்படை கப்பல் சாகரவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 ஜூலை 31) நாட்டை விட்டு புறப்பட்டது. இதனிடையே திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
31 Jul 2023