நிகழ்வு-செய்தி
பரிந்துரைக்கப்படும் மருந்துகளுடன் ஒருவர் கைது

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி வெலிசறை, கடற்படை கப்பல் கெமுனு யின் வீரர்கள், மஹாபாகே பொலிசாருடன் இனைந்து 300 பரிந்துரைக்கப்படும் மருந்து (டிரமடோல்) மாத்திரைகளை கைமாற்ற வைத்திருந்த ஒருவரை ஹெந்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்திட்கருகில் வைத்து நேற்று (அக்டோபர் 07) கைதுசெய்தனர்.
08 Oct 2016
மூன்று ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை

நல்லெண்ண மற்றும் பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய தற்காப்பு கடற்படை கப்பல்களான ‘கஷிமா’, ‘செடோயுகி’ மற்றும் அசாகிரி’ ஆகியவை இன்று மாலை (அக்டோபர் 07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
07 Oct 2016
ரொடெளவெள ஆரம்ப பாடசாலையில் மாணவர்களின் பாவனைக்கென நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கடற்படையினால் நிர்மாணிப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
07 Oct 2016
கடற்படையின் சிறு வேக படகுகளுக்கு ‘செட்ரிக்’ என பெயர் சூட்டல்

கடற்படையின் சிறப்பு படகு பிரிவின் (SBS) இணை நிறுவனறான காலம்சென்ற கொமாண்டர் (தொண்டர் கடற்படை) செட்ரிக் மார்ட்டென்ஸ்டைன் NVX 5068 அவர்களின் 70ம் பிறந்த நாலையொட்டி (அக்டோபர் 05, 2016) அவரை கௌரவப்படுத்தும் முகமாக இலங்கை கடற்படையினால் அதன் சிறு வேக படகுகள் ‘செட்ரிக்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
07 Oct 2016
வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தில் டெங்கு மற்றும் புற்றுநோய் தவிர்ப்பு நிகழ்ச்சி

வடக்கு கட்டளை தளபதி, ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களின் பணிப்பில், கடற்படை வீரர்கள் பொது சுகாதார பரிசோதகர்களுடன் இனைந்து ஊர்காவற்றுரை மற்றும் வேலணை பிரதேசங்களில் கடந்த செப்டம்பர் (2016) 28ம் மற்றும் 29ம் தினங்களில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வைத்திய அதிகாரிகளுக்கு உதவியளித்தனர்.
06 Oct 2016
இரு சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சேவையிலிருந்து பிரியாவிடை

பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் ஏறிக் ஜயாகொடி மற்றும் கொடி அதிகாரி கப்பல் பிரிவு, ரியர் அட்மிரல் தயானந்த நானாயக்கார இன்றுடன் (அக்டோபர் 06) தமது 34 வருட நீண்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்கள்.
06 Oct 2016
சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட ஆறு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களால் பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 6 மீனவர்கள் நேற்று (அக்டோபர் 05) கைது செய்யப்பட்டார்கள்.
06 Oct 2016
நைஜீரிய கடற்படை கப்பல் ‘யுனிட்டி’ இலங்கை வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நைஜீரிய கடற்படை கப்பல் ‘யுனிட்டி’, இன்று காலை (அக்டோபர் 05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
05 Oct 2016
2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிடைக்கப்பெற்ற ரகசிய தகலொன்றிட்கமைய கிரிந்தை, கரையோர பாதுகாப்பு படை நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் கதிர்காமம் போலிஸ் அதிரடி படை வீரர்களுடன் இணைந்து 2 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர். பலஹருவை பிரதேசத்தில் நேற்று (அக்டோபர் 04) மேற்கொள்ளப்பட்ட ஒன்றினைந்த தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
05 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி பிரதேச கடலில் தனியிழை வலை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 04) கைது செய்யப்பட்டார்கள்.
04 Oct 2016