நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் விஜித மாரப்பன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் விஜித மாரப்பன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இருந்து இன்று (2023 ஜூன் 23) ஓய்வு பெற்றார்.

23 Jun 2023

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'IKAZUCHI (DD-107)' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

22 Jun 2023

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ‘INS Vagir’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டுள்ளது

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 19 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ நீர்மூழ்கிக் கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து இன்று (2023 ஜூன் 22) தீவை விட்டு புறப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க புறப்படும் ‘INS Vagir’ நீர்மூழ்கி கப்பலுக்கு பிரியாவிடை வழங்கினர்.

22 Jun 2023

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்திய தூதுவராக கடமையாற்றும் திரு Maged Mosleh அவர்கள் இன்று (2023 ஜூன் 21) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

21 Jun 2023

இந்திய கடற்படையின் 'INS Vagir' நீர்மூழ்கிக் கப்பலில் கடற்படையினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து யோகா நிகழ்ச்சியொன்றை நடத்தினர்

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்திய கடற்படையின் 'INS Vagir' நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை இணைந்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (2023 ஜூன் 21) சிறப்பு யோகா நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தன. குறித்த நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.

21 Jun 2023

ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க தனது புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கைக்கு இன்று (2023 ஜூன் 21) விடைபெற்றார்.

21 Jun 2023

பிரான்ஸ் கடற்படையின் ‘Dupuy de Lôme’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான ‘Dupuy de Lôme’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த்துடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

21 Jun 2023

வெற்றிகரமான கூட்டு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு ‘PNS TIPPU SULTAN’ கப்பல் தீவை விட்டுச் சென்றது

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ‘PNS TIPPU SULTAN’ வெற்றிகரமாக தமது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை கடற்படை கப்பல் கஜபாகுவுடன் நடத்தப்பட்ட கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 ஜூன் 04) தீவை விட்டு வெளியேறியது. இதேவேளை, குறித்த கப்பலுக்கு கடற்படையினரின் பாரம்பரிய பிரியாவிடை நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

20 Jun 2023

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படை ஆதரவு

யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் நடவடிக்கைகள் தொடங்கினர். அதன்படி, குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓய வரையிலான பகுதியில் செல்லும் யாத்திரிகர்களின் தேவைகள் குறித்து கடற்படையினர் உதவி வழங்கினர். இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பக்தர்களின் வசதிக்காக கடற்படையால் வழங்கப்படும் சேவைகளை பார்வையிட்டதுடன், ஜூன் 15 ஆம் திகதி கதிர்காமம் செல்லும் பாத யாத்திரையில் இணைந்தார்.

19 Jun 2023

கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் புதிய தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா (ஓய்வு) இன்று (2023 ஜூன் 19) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

19 Jun 2023