நிகழ்வு-செய்தி
தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது

2023 தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2023 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
20 May 2023
தென்கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் நிகழ்ச்சியொன்று 2023 மே 18 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் கட்டளையின் பொது வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
20 May 2023
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, கடற்படை நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று நடத்தியது

2023 மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக வாய் சுகாதார தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவையினால் நடத்தப்படுகின்ற பல் மருத்துவ சேவைகளின் மற்றுமொரு பகுதியாக 2023 மே 9 முதல் 19 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையில் நடமாடும் பல் சேவையொன்று வெற்றிகரமாக நடத்தியது.
20 May 2023
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகர்கள், பிரியாவிடை மற்றும் அறிமுகத்திற்கான உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தளபதியை சந்தித்தனர்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கடற்படை ஆலோசகராக செயல்படும் Lieutenant Commander RICHARD LISTER மற்றும் புதிய கடற்படை ஆலோசகராக நியமிக்கப்பட உள்ள Lieutenant Commander JESSICA V. DE MONT ஆகியோர் உத்தியோகபூர்வ பிரியாவிடை மற்றும் அறிமுக சந்திப்புக்காக இன்று (2023 மே 19), கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தனர்.
19 May 2023
கடற்படைத் தளபதி வெலிசரவில் உள்ள ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்திற்கு விஜயம்
தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (18 மே 2023) வெலிசரவில் உள்ள ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்திற்குச் (Anchorage Naval Care Center) சென்று புனர்வாழ்வில் தங்கியிருக்கும் கடற்படை வீரர்களின் நலன்களைக் கேட்டறிந்தார். இந்த விஜயத்தின் போது கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களும் கலந்துகொண்டார்.
18 May 2023
இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான, சிரேஷ்ட கேர்ணல் Zhou Bo அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 மே 17) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
18 May 2023
இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2023 மே 16) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
17 May 2023
கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகளுக்காக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) சிறப்புரையாற்றினார்
கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதற்கான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட விரிவுரைகளின் தொடரில் ஆறாவது விரிவுரை ‘ Location, Location, and Location: Defence Diplomacy & Indo Pacific Strategies for Sri Lanka’ என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை கடற்படையின் 20வது தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) அவர்களால் 2023 மே 13 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கர்ணகொட கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.
16 May 2023
கடற்படை தாதி கல்லூரியில் தாதி பாடநெறியை முடித்த 41 பேர் தாதி உறுதிமொழியை வழங்கினர்
சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 41 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் தொப்பி அணிவிப்பு மற்றும் தாதியர் உறுதிமொழி வழங்கும் விழா இன்று (2023 மே 15) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார கல்லூரியின் பீடாதிபதி திரு. எஸ்.எஸ்.பீ வர்ணகுலசூரிய அவர்கள் கலந்து கொண்டார்.
15 May 2023
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 32வது இளநிலை கடற்படைப் பணியாளர் பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றது
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 32வது இளநிலை கடற்படைப் பணியாளர் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023 மே 11 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவின் தலைமையில் அட்மிரல் வசந்த கரண்னாகொட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
15 May 2023