நிகழ்வு-செய்தி
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்ச்சி

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
05 Feb 2023
25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 74 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு மரியாதை செலுத்தியது

75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (2023 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் கட்டளை அதிகாரி கேப்டன் இந்திக த சில்வாவின் தலமையில் இடம்பெற்றது.
04 Feb 2023
75 வது சுதந்திர தின நிகழ்வில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது

75 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (2023 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
04 Feb 2023
பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான ‘HMS TAMAR’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பு

பிரித்தானிய அரச கடற்படைக்கு சொந்தமான ‘HMS TAMAR’ என்ற கப்பல் 2023 ஜனவரி 27 ஆம் திகதி பழுதுபார்க்கும் பணிக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் அதன் கட்டளை அதிகாரி கமாண்டர் டீலோ எலியட் - ஸ்மித் (Commander Teilo Elliot – Smith) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் த சில்வா இடையே சந்திப்பொன்று 2023 ஜனவரி 28 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
01 Feb 2023
இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் பணிப்பாளராக ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 2023 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும் படி இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை (National Authority for Implementation of the Chemical Weapons Convention - NACWC) நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையின் பணிப்பாளராக கடற்படை பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்கவை நியமித்துள்ளார்.
31 Jan 2023
கடற்படையினரின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 951 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செல்ல கதிர்காமத்தில் பொதுமக்களுக்காக திறந்து வைப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்ட 951 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2023 ஜனவரி 29) தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவின் தலைமையில் செல்ல கதிர்காமம் ஸ்ரீ தர்ம நிகேதன மஹா விகாரை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
30 Jan 2023
ஒத்துழைப்பு, தயார்நிலை மற்றும் பயிற்சிக்கான கடற்படை பயிற்சி (CARAT–2023) வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஐக்கிய அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல்கள் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டிற்காக நடத்தப்பட்ட ஒத்துழைப்பு, தயார்நிலை மற்றும் பயிற்சிக்கான கடற்படை பயிற்சி (Cooperation Afloat Readiness and Training Exercise - CARAT–23) 2023 ஜனவரி 19 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 25, வரை கொழும்பு, திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் பகுதிகள் மையமாக கொண்டு நடைபெற்றதுடன் இன்று (ஜனவரி 26, 2023) குறித்த பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
27 Jan 2023
அமெரிக்காவின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைக் கட்டளை அதிகாரி மற்றும் கடற்படைத் தளபதி இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைக் கட்டளை அதிகாரி Rear Admiral Joaquin J. Martinez de Pinillos உள்ளிட்ட குழுவினர் இன்று (2023 ஜனவரி 26) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.
26 Jan 2023
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் முஹம்மட் சப்டார் கான் (Colonel Muhammed Safdar Khan) இன்று (2023 ஜனவரி 25) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.
25 Jan 2023
CARAT - 2023 பயிற்சியின் கடல் கட்டம் மேற்கு கடற்படைக் கட்டளை கடல் பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது

CARAT - 2023 இருதரப்பு பயிற்சியின் கடல் கட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு, இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் அமெரிக்க கடற்படையின் ‘USS Anchorage’ ஆகிய கப்பல்கள் 2023 ஜனவரி 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதுடன், மேலும் இக் கப்பல்கள் 2023 ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில், நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்படை கட்டளைக் கடல் பகுதியில் பல கடற்படை பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தியது.
24 Jan 2023