நிகழ்வு-செய்தி
கடற்படை வீரர்களுக்கு உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது

இலங்கை கடற்படைக்குள் நிறுவப்பட்ட உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த விரிவுரையொன்று, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால், 2025 ஜூன் 11 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
13 Jun 2025
கடற்படை இரத்ததானம் செய்யும் சமூகப்பணியில் ஈடுபட்டது

இலங்கை கடற்படையால் சமூக சேவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு இரத்த தான நிகழ்வானது 2025 ஜூன் 11 ஆம் திகதி பூஸ்சவில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் நிபுன நிறுவனத்தின் கடற்படை மருத்துவமனை வளாகத்திலும், யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் காஞ்சதேவ நிறுவன வளாகத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றது.
13 Jun 2025
இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை தன்வசப்படுத்தியதை உறுதிப்படுத்திய ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு கடற்படைத் தளபதியின் பாராட்டுக்கள்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) 2025 மார்ச் 09 ஆம் திகதி இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் (Manual Treadmill) 24 மணிநேரம் தொடர்ந்து நடந்து இரண்டு (02) உலக கின்னஸ் சாதனைகளைப் நிகழ்த்தியதுடன். அந்த கின்னஸ் உலக சாதனைக்கான உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் இலங்’கை கடற்படைக்கு கௌரவத்தையும் அபிமானத்தையும் பெற்றக் கொடுத்த்தனால் 2025 ஜூன் 12 ஆம் திகதி கடற்படைத் தளபதி தனது பாராட்டுகளை இலங்கை கடற்படை சார்பாக தெரிவித்தார்.
13 Jun 2025
கடற்படையினரால் வடக்கில் உள்ள மீனவ சமூகத்தை ஆபத்தான சுகாதாரம் மற்றும் அவசர நோய் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத் திட்டம்

அரச கோட்ப்பாடுகளுக்கு அமைவாக சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படைத் திணைக்களம் மற்றும் மீன்வள, நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடலில் சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு அறிவூட்டவும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு செயற்திட்டத்தை 2025 ஜூன் 05 முதல் 09 வரை இலங்கை கடற்படைக் கப்பல் எலார, கடற்படை துணை நிறுவனங்களான மைலடி மற்றும் பருத்தித்துறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு கடற்படை இவ் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
12 Jun 2025
அம்பாறை நாமல் ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள மதகினை சீர்செய்வதற்கு கடற்படையின் சுழியோடி பங்களிப்பு

செயலற்ற நிலையில் இருந்த நாமல் ஓயா நீர்த்தேக்கத்தின் இடது கரை வான் மதகைச் சரிசெய்து அதனை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025 ஜூன் 06 ஆம் திகதி சுழியோடி ஆதரவினை கடற்படையினர் வழங்கினர்.
11 Jun 2025
அரச நோர்வே கடற்படைக் கப்பலான ‘HNOMS ROALD AMUNDSEN’ தீவுக்கு வந்தடைந்தது

அரச நோர்வே கடற்படையின் கப்பலான ‘HNOMS ROALD AMUNDSEN’ விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2025 ஜூன் 10 ஆம் திகதி அன்று தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரவேற்க்கும் நிகழ்வானது நடைப்பெற்றது.
11 Jun 2025
உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு கடற்படையின் சமூக பங்களிப்பு.

'முழுநிறைவான வாழ்க்கை - வசதியான நாடு' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடல் மற்றும் கடலோர வலயத்தின் நிலையான இருப்புக்கு உறுதியளித்துள்ள கடற்படை, 'நிலைபேறான உயிர்சார் உலகம் – என்னும் பசுமையான வாழ்க்கை' என்ற கருத்தை யதார்த்தமாக்குவதற்காக, ஜூன் 05 உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு 2025 ஜூன் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை கடற்படையானது சமூக சேவையையில் ஈடுபட்டது.
10 Jun 2025
கடற்படைத் தளபதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 06 முதல் 08 வரை வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றியதுடன் கடற்படையின் நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு மற்றும் நலன்புரி திட்டங்களை திறம்பட நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கி, கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கினார்.
09 Jun 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 06 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹேஹெட்டுவாகம, அமுனுகலை, அடம்பனை மற்றும் கட்டுபத் வாவி ஆகிய பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட நான்கு (04) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூன் 06 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
09 Jun 2025
உலக சமுத்திர தின தேசிய திட்டம் கொழும்பு துறைமுக நகரத்தில்

ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரும் உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு, சமுத்திரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்திற்காக சமுத்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டம் கொழும்பு துறைமுக நகரில் இன்று (2025 ஜூன் 08) நடைபெற்றது.
09 Jun 2025