நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி, திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, 2025 மே 18 அன்று படைப்பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர்களுடன் உரையாடி, கடற்படை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான வழிமுறைகளை வழங்கி, கடற்படையின் பொறுப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.

22 May 2025

இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் கர்னல் Avihay Zafrany, இன்று (2025 மே 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

20 May 2025

பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவு தூபி முன்னிலையில் ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போர்வீரர் சேவை ஆணையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், பத்தரமுல்ல போர்வீரர் நினைவு தூபி முன்னிலையில் 2025 மே 19 ஆம் திகதி பெருமையுடன் நடைபெற்றது.

20 May 2025

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை கூட்டம் மற்றும் மாநாடு கொழும்பில் தொடங்கியது

இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் ஏற்பாட்டில், சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இன்று (2025 மே 19) கொழும்பில் உள்ள கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் ஆரம்பித்ததுடன் அங்கு வரவேற்ப்பு உரையானது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

20 May 2025

இலங்கை கடற்படையினர் 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடியதன் மூலம் கடற்படையின் சுழியோடி செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது

இலங்கை கடற்படையின் சுழியோடி திறன்களை விரிவுபடுத்தும் வகையில், திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள எலிபன்ட் தீவுக்கு அருகிலுள்ள ஆழ்கடலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் மேற்பார்வையின் கீழ் 09 பேரை கொண்ட கடற்படை சுழியோடி குழுவானது 2025 மே 18 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடி வெற்றிகரமாக திரும்பினர்.

19 May 2025

ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான கடற்படைக்காக, கடற்படையானது மற்றொரு மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலை மூலம் ஆரோக்கியமான கடற்படையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் புதிய பரிமாணங்களில் ஒன்றாக, கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளரின் முழு மேற்பார்வையின் கீழ், சிவனொலிபாத மலையை ஆராயும் நிகழ்ச்சி 2025 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் குறித்த பணிக்குழுவின் 34 கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

03 Apr 2025

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடற்படை தளபதியை சந்தித்தார்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 02 அன்று சந்தித்தார்.

03 Apr 2025

கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படை சங்கத்தின் கௌரவ தலைவர் சந்தித்தார்

இலங்கை கடற்படை சம்மேளனத்தின் கௌரவத் தலைவர் ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைச் சங்கத்தின் கௌரவ தலைவர் 2025 ஏப்ரல் 02 அன்று கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

03 Apr 2025

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஏப்ரல் 01 அன்று திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஏப்ரல் 01 அன்று திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

03 Apr 2025

கண்டி, அலவதுகொட ம.மா/கடு/மாவதுபொல முஸ்லிம் மகா வித்தியாலயம் "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கான கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கண்டி, அலவதுகொட ம.மா/கடு/மாவதுபொல முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 18 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.

02 Apr 2025