2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2023 மே 31 ஆம் திகதி இரவு கொழும்பு 11, மல்வத்தை வீதிப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துச் சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை அடிக்கடி தனது உதவியை சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வழங்குகிறது. அதன் பிரகாரம் கடற்படையினருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் கொழும்பு டேம் வீதி பொலிசார் இணைந்து 2023 மே 31 ஆம் திகதி இரவு கொழும்பு 11, மல்வத்தை வீதி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வீதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த ஒருவரை சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பத்தொன்பது (49) வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) மற்றும் இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக டேம் வீதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.