நெடுந்தீவு படகுத்துரை நுழைவாயில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 38 பேர் கடற்படையினரால் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிக்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேர் மற்றும் அங்கு கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஜூன் 07) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் உள்ள குறிகட்டுவான் படகுத் துரையில் இருந்து முப்பத்தெட்டு (38) பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகொன்று நெடுந்தீவு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கடற்பரப்பில் (Low Tide) விபத்துக்குள்ளானது. குறித்த காரணத்தினால் கப்பலுக்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு கப்பல் ஆபத்தில் உள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்துக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

இந்த தகவலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடலோர ரோந்து கப்பல்கள் மற்றும் சிறிய படகுகளை பயன்படுத்தி விபத்தில் சிக்கிய படகையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேலும், கடற்படையின் இந்த உடனடி நடவடிக்கையின் காரணமாக, பெரும் உயிர் மற்றும் பொருள் சேதங்களை தவிர்க்க முடிந்ததுடன் 'காளி அம்பாள் 2' படகு நெடுந் தீவின் துறைமுக நுழைவாயிலில் மூழ்கியிருந்தால், நெடுந்தீவின் அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும், நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.