Premier Women's Futsal Tournament - 2023 பொட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை மகளிர் அணி வென்றது

2023 ஒக்டோபர் 15 ஆம் திகதி தெஹிவளை CFC கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற Premier Women's Futsal Tournament – 2023 பொட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை மகளிர் கால்பந்து அணி வென்றது.

அதன்படி, கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் நாடளாவிய ரீதியில் 16 அணிகள் பங்குபற்றியதுடன், கடற்படை மகளிர் அணிக்கும் CFCA மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் கடற்படை மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றது.

மேலும், இறுதிப்போட்டியின் சிறந்த வீராங்கனை மற்றும் போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையை பெண் மாலுமி கே.பி.எஸ் பெரேராவும் சிறந்த கோல்கீப்பர் கோப்பையை பெண் மாலுமி மாலுமி எச்.ஜி.என்.குமாரியும் வென்றனர்.