Eagle’s Cup சவால் கோப்பை ஹேண்ட்பால் போட்டித்தொடரின் ஆண்கள் பிரிவு சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

Eagle’s Cup சவால் கிண்ண ஹேண்ட்பால் போட்டித்தொடர் 2023 நவம்பர் 06 முதல் 09 வரை மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பை கடற்படை ஆண்கள் ஹேண்ட்பால் அணி வென்றது.

பல அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் இராணுவ அணியும் கடற்படை அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன, அங்கு கடற்படை அணி 33-32 என்ற புள்ளிக்கணக்கில் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில், சிறந்த துடுப்பாட்ட வீரராக கடற்படை வீரர் டப்.ஏ.சி.பி விஜேந்திரவும், சிறந்த வலை வீச்சாளராக டி.எஸ்.டி சில்வாவும், சிறந்த வீரராக கே.எம்.ஆர்.எஸ்.எஸ்.பண்டாரவும் கோப்பைகளை வென்றனர்.