07வது தேசிய வேகப் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் - 2023 இல் ஒட்டுமொத்த திறந்த ஆண்களுக்கான இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

07வது தேசிய வேகப் படகோட்டுதல் போட்டி - 2023 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 02 வரை பத்தரமுல்ல தியவன்னா ஓயாவில் நடைபெற்றது, இதில் ஒட்டுமொத்த திறந்த ஆண்களுக்கான போட்டியில் வெற்றியை கடற்படை பெற்றது

இந்த பொட்டித்தொடருக்காக இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, Adventure Seals, Bolgoda Lake Rowing Club, Diyawanna Water Sports Club, MAKVONS Canoe and Kayak Club மற்றும் Lanka Adventure அணிகள் மற்றும் Jade High School, Asian International School, Gateway College Colombo மற்றும் Universal College Lanka ஆகிய 12 பாடசாலை அணிகள் பங்கேற்றன.

இதன்படி, 200/500/1000 மீற்றர் திறந்த ஆண் K-01 பிரிவில் கலந்து கொண்ட கடற்படை வீரர் எச்.எம்.ஏ.டி. குணதிலக்க தங்கப் பதக்கங்களையும், 500m திறந்த ஆண் K-01 பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீர்ர் கே.கே.விராஜ் வெண்கலப் பதக்கத்தையும், 500m/1000m -01 ஆண் K - 02 இல் போட்டியிட்ட கடற்படை வீரர் ஏ.கே.எஸ்.எஸ். ஜயவர்தன மற்றும் கடற்படை வீரர் ஹெச்.ஈ.எம்.என்.ஜி.ஜி.பி ஏகநாயக்க ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

200/1000 மீட்டர் திறந்த ஆண்கள் K-04 பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீரர் ஏ.கே.எஸ்.எஸ் ஜெயவர்தன, கடற்படை வீரர் ஜே.சி.ஜெயசிங்க, கடற்படை வீரர் டிஎம்டிஎஸ் பண்டார மற்றும் லெப்டினன்ட் எல்.பி.டி.என் தயானந்த ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். மேலும், 1000 மீற்றர் திறந்த ஆண் K-04 பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீரர் ஏ.கே.எஸ்.எஸ்.ஜயவர்தன, கடற்படை வீரர் ஜே.சி.ஜயசிங்க, கடற்படை வீரர் டி.எம்.டி.எஸ். பண்டார மற்றும் கடற்படை வீரர் ஹெச்.ஈ.எம்.என்.ஜி.ஜி.பி ஏகநாயக்க தங்கப் பதக்கங்களை வென்றனர்.

மேலும், 200/500/1000 மீற்றர் திறந்த ஆண்களுக்கான சி-02 பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீரர் பி.எம்.சி.டி பஸ்நாயக்க மற்றும் கடற்படை வீரர் ஆர்எம்எஸ்ஆர் ரத்நாயக்க ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

மேலும், இந்நிகழ்வில் இலங்கை விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஷியாமல் பெர்னாண்டோ (ஓய்வு), தெற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய, இராணுவ மற்றும் விமான வேகப் படகுப்போட்டி அணிகள் உட்பட பல விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி விழையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.