'தேசிய படகோட்டம் போட்டித்தொடர்' காக தீவில் வெற்றிகரமாக முடிவடைந்தது

தேசிய படகோட்டம் போட்டித்தொடர் 2024 ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டக்குளி காக தீவில் பிரதிப் தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது, இதில் கடற்படை படகோட்டம் அணி பல வெற்றிகளைப் பெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்காக நடத்தப்பட்ட 'தேசிய பாய்மரப் போட்டித் தொடருக்காக' கடற்படை பாய்மரக் குழு உட்பட தீவின் பிரபல பாய்மரக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். அங்கு ILCA 6 OPEN பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் பீ.டீ.டீ.எஸ் ராஜபக்சவும், WIND SURFING பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் கே.பீ.பீ குணவர்தனவும், இரண்டாம் இடத்தை கடற்படை வீரர் டப்.ஏ.எஸ் வீரதுங்கவும், ILCA 7 பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் யுடி ராஜபக்ஷவும் இரண்டாவது இடத்தை கடற்படை வீரர் பீ.டீ.டீ.எஸ் ராஜபக்சவும் பெற்றனர்.

மேலும், GP 14 பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் டி.ஏ.எஸ் வீரதுங்க மற்றும் கடற்படை வீரர் ஜி.பி.பி கருணாரத்னவும், இரண்டாம் இடத்தை கடற்படை வீரர் கே.சி டி சொய்சா மற்றும் கடற்படை வீரர் டி.டி.எஸ் பெரேராவும், மூன்றாவது இடத்தை கடற்படை வீரர் ஏ.எம்.ஜே.பி. அத்தநாயக்க மற்றும் கடற்படை வீரர் ஏ.எஸ்.டி சொய்சாவும், கடற்படை வீரர் ஜே.எச்.எம்.பி.ஐ.ஜெயபத்ம மற்றும் கடற்படை வீரர் எஸ்.பி.பி.என்.குமார ஆகியோர் ENTERPRISE பிரிவில் முதலிடத்தையும், கடற்படை வீரர் கே.எஸ்.கே.டி சில்வா மற்றும் கடற்படை வீரர் யு.ஜி.டி.மதுசங்க இரண்டாமிடத்தையும், கடற்படை வீரர் ஜே.பி.எஸ்.டி.சில்வா மற்றும் கடற்படை வீரர் எல்.ஏ.சி.எம் குணதிலக்க மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், ஒலிம்பிக் கமிட்டியின் செயலாளர் திரு.மக்ஸ்வெல் டி சில்வா, கடற்படை பாய்மரப் படகு பிரிவின் தளபதி கப்டன் சமிந்த குணரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.