கடற்படை கெனோய் மற்றும் காயக் அணியினர் தலைமன்னார் கடலில் காயக் பயிற்சியொன்றை நடத்தினர்

இலங்கை தேசிய கெனோய் மற்றும் காயக் சங்கம் (National Association of Canoeing and Kayak Sri Lanka – NACKSL) இந்திய கெனோய் மற்றும் காயக் சங்கத்துடன் (Indian Kayaking and Canoeing Association – IKCA) இணைந்து 2024 ஏப்ரல் 10 மற்றும் 11 திகதிகளில் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நடத்த உள்ள கடல் காயக் போட்டித்தொடருக்கு (Indo Sri Lanka Annual Canoeing Sprint – 2024) இணையாக இந்த கெனோய் பயிற்சி அமர்வு இன்று (2024 மார்ச் 23) தலைமன்னார் கடலில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் பூரண பங்களிப்புடன், முதன்முறையாக ஏற்பாடு செய்யப்படுகின்ற கடல் காயக் போட்டித்தொடர் நடைபெறுகின்ற தலைமன்னாரில் உள்ள ஏழு மணல் திட்டுகள் (Sand dune VII) கடலில் மற்றும் காற்றின் வேகம் மற்றும் தன்மையை பரிசோதிக்கும் வகையில் போட்டியில் பங்கேற்கும் கடற்படை காயக் அணியின் உறுப்பினர்களுக்கு, போட்டி நடைபெறும் கடல் பகுதியில் உள்ள சூழலை பழக்கப்படுத்துவதற்காக இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.