கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-2024 ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்களை பயிற்சிக் கட்டளை வென்றது

கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-2024, 2024 மார்ச் 26 முதல் 30 ஆம் திகதி வரை வெலிசரவில் நடைபெற்றது, இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளை வென்றது.

கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்துகொண்ட இந்த போட்டித்தொடரில், ஆண்களுக்கான 51 கிலோ கிராம் ஏடைப் பிரிவில் போட்டியிட்ட ஏவுகணை கட்டளையின் கடற்படை வீரர் எஸ்.பீ.டப்.ஜீ.சீ.வீ ரத்னசிறி போட்டித்தொடரின் சிறந்த வீரருக்கான வெற்றிக்கிண்ணத்தை வென்றார். 80 கிலோ கிராம் ஏடைப் பிரிவில் போட்டியிட்ட பயிற்சி கட்டளையின் கடற்படை வீரர் டப்.ஏ.எஸ்.கே அயஸ்காந்த சிறந்த தோல்வியடைந்த வீரருக்கான கோப்பையை வென்றார்.

மேலும், பெண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீராங்கனை எஸ்.ஐ.எச்.டி சில்வா சிறந்த வீராங்கனைக்கான கோப்பையையும், 48 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீராங்கனை ஆர்.எம்.டி.செவ்வந்தி சிறந்த தோல்வியடைந்த வீராங்கனைக்கான கோப்பையையும் வென்றனர்.

மேலும், கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிபின் பரிசளிப்பு விழா கடற்படை பணிப்பாளர் நாயகம் தனிப்பட்ட ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கடற்படை குத்துச்சண்டை பிரிவின் தளபதி எம்.யு.குமாரணதுங்க மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்துகொண்டனர்.