கடற்படை கோல்ப் வீரர் சலித புஷ்பிக பாகிஸ்தானில் நடைபெற்ற 63வது தேசிய கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் ஜே.ஆர்.ஜெயவர்தன கோப்பையை வென்றார்

2024 ஏப்ரல் 18 முதல் 2024 ஏப்ரல் 21 வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள Margalla Greens Golf Club யில் நடைபெற்ற 63வது தேசிய கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை கோல்ப் வீரர் சாலித புஷ்பிக மற்றும் ரோயல் கொழும்பு கோல்ஃப் சங்கத்தைச் சேர்ந்த உசித ரணசிங்க ஆகியோர் ஜே.ஆர்.ஜெயவர்தன கோப்பையை வென்றனர்.

இதன்படி, 63வது பாகிஸ்தான் தேசிய கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரின் குழு நிகழ்வில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கடற்படை கோல்ப் வீரர் சாலித புஷ்பிக மற்றும் அவரது கோல்ப் பங்குதாரர் உசித ரணசிங்க ஆகியோர் மொத்தம் 148 புள்ளிகளைப் பெற்று ஜே.ஆர்.ஜெயவர்தன கோப்பையை வென்றனர்.

மேலும், ஒற்றையர் பிரிவில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர் சாலித புஸ்பிக, 63வது பாகிஸ்தான் தேசிய கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் 289 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.