‘கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டித்தொடர் – 2024’ கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்றது

‘கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டித்தொடர் – 2024, திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவின் தலைமையில் 2024 ஜூன் 01ம் மற்றும் 02ம் திகதிகளில் நடைபெற்றது, இதில் ஆண்களுக்கான வெற்றி வாகையை வெளியீட்டு கட்டளையும் பெண்களுக்கான வெற்றி வாகையை தெற்கு கடற்படை கட்டளையும் வென்றது.

அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள், கட்டளைகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டித் தொடரின் தடம் மற்றும் கள நிகழ்வுகளில் கலந்து கொண்டனர், ஆண்களுக்கான இரண்டாம் இடத்தை கிழக்கு கடற்படை கட்டளையும், பெண்களுக்கான இரண்டாம் இடத்தை பயிற்சி கட்டளையும் வென்றது.

இப்போட்டித் தொடரில் சிறந்த வீரருக்கான விருது மற்றும் கள நிகழ்வில் சிறந்த வீரருக்கான விருது லெப்டினன்ட் என்.ஜி.வய்.திலானும், தடப் போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது பயிற்சி கட்டளையின் கடற்படை வீர்ரான டப்.எம்.டி.எம்.வாசலவும், சிறந்த வீராங்கனைக்கான விருது தென் கடற்படை கட்டளையின் கடற்படை வீராங்கனையான டபிள்யூ.ஏ.என்.ஏ வீரப்பெருமவும், தடப் போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை தென் கடற்படை கட்டளையில் வீராங்னையான ஜி.பி.எஸ் உமயங்கனியும், கள நிகழ்வில் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை தென் கடற்படை கட்டளையின் கடற்படை வீராங்கனையான டபிள்யூ.ஏ.என்.ஏ வீரப்பெருமவும் வென்றனர்.

மேலும், இந் நிகழ்வுக்காக கொடி அதிகாரி வெளியீட்டு கட்டளை ரியர் அட்மிரல் சந்திம சில்வா, கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் கட்டளைத் தளபதி கொமடோர் ரொஹான் ஜோசப் உட்பட பல அதிகாரிகள், கடற்படை வீர்ர்கள் கலந்துகொண்டனர்.