எரங்க பாத்திய சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஆண் மற்றும் பெண் மூன்றாவது இடங்கள் கடற்படை பெற்றுள்ளது

2024 ஜூன் 01 ஆம் திகதி மிரிஸ்வத்த அன்டிய பிரதேசத்தில் நடைபெற்ற எரங்க பாத்திய சைக்கிள் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மூன்றாம் இடங்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் தலைமையில் நடைபெற்ற எரங்க பாத்திய சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் இலங்கையில் புகழ்பெற்ற சைக்கிள் ஓட்டுதல் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள் கழந்துகொண்டனர். ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி பிலிகுத்துவ சந்தியில் இருந்து ஆரம்பமாகி புத்பிட்டிய சந்தி, மல்வத்துஹிரிபிட்டிய, வதுரகம, நெல்லிகஹமுல, யக்கல மற்றும் மிரிஸ்வத்தை வரை 138.8 கிலோமீற்றர் தூரம் ஆறு சுற்றுகளாக இடம்பெற்றது. இப்போட்டியில் கடற்படை வீர்ரான ஜி.ஜே.எச் குமார, 03 மணித்தியாலங்கள் 18 நிமிடங்கள் 10 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும், பிலிகுத்துவ சந்தியில் இருந்து ஆரம்பமான பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி புத்பிட்டிய சந்தி, மல்வத்துஹிரிபிட்டிய, வதுரகம, நெல்லிகஹமுல, யக்கல மற்றும் மிரிஸ்வத்தை வரை 68.4 கிலோமீற்றர் தூரம் மூன்று சுற்றுகளாக இடம்பெற்றது. இப் போட்டியை 02 மணித்தியாலங்கள் 08 நிமிடங்கள் 07 வினாடிகளில் நிறைவு செய்த கடற்படை வீராங்கனை டி.ஏ.ஏ.சந்தமினி போட்டித் தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.