விளையாட்டு செய்திகள்

07வது தேசிய வேகப் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் - 2023 இல் ஒட்டுமொத்த திறந்த ஆண்களுக்கான இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

07வது தேசிய வேகப் படகோட்டுதல் போட்டி - 2023 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 02 வரை பத்தரமுல்ல தியவன்னா ஓயாவில் நடைபெற்றது, இதில் ஒட்டுமொத்த திறந்த ஆண்களுக்கான போட்டியில் வெற்றியை கடற்படை பெற்றது

03 Dec 2023

அமைப்புகளுக்கிடையேயான இளைய எல்லே போட்டித்தொடரில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

இலங்கை எல்லே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைப்புகளுக்கிடையேயான இளைய ஆண்கள் எல்லே போட்டித்தொடர் 2023 நவம்பர் 21 முதல் 24 வரை வெலிசர நவலோக விளையாட்டு மைதானத்தில் மற்றும் களனி பொல்ஹேன சீவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன், அங்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது.

28 Nov 2023

Eagle’s Cup சவால் கோப்பை ஹேண்ட்பால் போட்டித்தொடரின் ஆண்கள் பிரிவு சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

Eagle’s Cup சவால் கிண்ண ஹேண்ட்பால் போட்டித்தொடர் 2023 நவம்பர் 06 முதல் 09 வரை மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பை கடற்படை ஆண்கள் ஹேண்ட்பால் அணி வென்றது.

14 Nov 2023

Premier Women's Futsal Tournament - 2023 பொட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை மகளிர் அணி வென்றது

2023 ஒக்டோபர் 15 ஆம் திகதி தெஹிவளை CFC கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற Premier Women's Futsal Tournament – 2023 பொட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை மகளிர் கால்பந்து அணி வென்றது.

18 Oct 2023

12வது பாதுகாப்பு சேவைகள் துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடரில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது

2023 செப்டெம்பர் 17 முதல் 24 வரை வெலிசர கடற்படை துப்பாக்கி சுடும் வளாகத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடரில், கடற்படை துப்பாக்கி சுடும் அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

26 Sep 2023

12வது பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023 ஆண்கள் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

2023 செப்டம்பர் 05 ஆம் திகதி கட்டுநாயக்க, இலங்கை விமானப்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி 2023 இன் ஆண்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது.

06 Sep 2023

கட்டளைகளுக்கிடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டி - 2023 இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் 2023 ஆகஸ்ட் 30 ஆம் திகதி இடம்பெற்ற 2023 கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டித்தொடரில் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படைக் கட்டளை வென்றதுடன் பெண்கள் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளை வென்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமேற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமடோர் துஷார உடுகம கலந்துகொண்டார்.

01 Sep 2023

12வது பாதுகாப்பு சேவைகள் கெரம் போட்டியில் கடற்படை ஆண்கள் கெரம் அணி இரண்டாம் இடத்தை வென்றது

2023 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படை கப்பல் கெமுணு நிருவனத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் கெரம் போட்டியில் ஆண்கள் பிரிவின் இரண்டாம் இடத்தை கடற்படை ஆண்கள் கேரம் அணி வென்றது.

31 Aug 2023

ரஷ்யாவில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு படைகள் ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டித்தொடரில் மூன்றாம் இடத்தை இலங்கை பாதுகாப்பு படைகள் ரக்பி அணி பெற்றுக்கொண்டது

ரஷ்யாவின் மொஸ்கோவில் 2023 ஆகஸ்ட் 22 முதல் 28 வரை நடைபெற்ற முதல் பாதுகாப்பு படைகள் ஆண் ஏழு பேர் கொண்ட போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு படை ரக்பி அணி மூன்றாவது இடத்தை வென்றது.

29 Aug 2023

இலங்கை இடைநிலை குத்துச்சண்டை போட்டித்தொடர் 2023 யின் வெற்றி கடற்படைக்கு

இலங்கை கடற்படை குத்துச்சண்டை சங்கம் ஏற்பாடு செய்த இடைநிலை குத்துச்சண்டை போட்டித்தொடர் 2023 யின் 06 தங்கப் பதக்கங்கள், 08 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் இலங்கை கடற்படை குத்துச்சண்டை அணி போட்டியின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை வென்றது.

28 Aug 2023