“முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் நோக்கங்களை அடைவதற்காக, கடற்படை, ஒரு முக்கிய பங்காளியாக, தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட வெற்றிகரமான கடற்படை நடவடிக்கையில், போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் ஆறு (06) சந்தேக நபர்களும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலும் கைது செய்யப்பட்டன. பல நாள் மீன்பிடி படகு இன்று (08 மார்ச் 2026) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய நிபுணர் பரிசோதனையின் போது, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்ளில் சுமார் நூற்று இரண்டு (102) கிலோகிராம் ஹெராயின் மற்றும் தொள்ளாயிரத்து (900) கிராமுக்கு மேல் கொகைன் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோர் போதைப்பொருள் கடத்தலை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.