IUU Fishing-ta

யாழ்ப்பாணத்தில் இரவு நேரத்தில் சுழியோடி சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளை பிடித்ததற்காக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

2026 ஏப்ரல் 27 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்தின் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், செல்லுபடியாகும் சுழியோடி உரிமங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இரவு சுழியோடுதலில் ஈடுபட்டு, கடல் அட்டைகளைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்த மூன்று (03) நபர்களையும், நானூற்று ஐம்பது (450) கடல் அட்டைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

28 Apr 2026

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 41 பேர் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 01 முதல் 15 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் நாற்பத்தொரு (41) நபர்களுடன் பதினொரு (11) சிறுபடகுகள் மற்றும் இரண்டு (02) இழுவைப் படகுகள் ஆகியவற்றை கடற்படையினர் கைது செய்தனர்.

18 Apr 2026

மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பகுதியில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு கடற்படையால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) நான்கு (04) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

15 Apr 2026

உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிக் படக்கொன்றுடன் 10 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

10 Apr 2026

கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் சுமார் 2000 கடல் அட்டைகளுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் 2026 மார்ச் 12 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சுமார் இரண்டாயிரம் (2000) கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

18 Mar 2026

மன்னாரின் வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் பகுதியில் 2026 மார்ச் 11 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) இரண்டு (02) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Mar 2026

மன்னார் தெற்கு கடலில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் 2026 மார்ச் 04 ஆம் திகதி காலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், நானூற்று முப்பத்தேழு (437) கடல் அட்டைகளுடன், ஒரு (01) டிங்கி படகையும் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

06 Mar 2026

கற்பிட்டி முகத்துவாரம் கடற்பரப்பில் 685 கிலோகிராம் கடல் அட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 23 ஆம் திகதி கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அறுநூற்று எண்பத்தைந்து (685) கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள், ஒரு (01) சந்தேக நபர் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

24 Feb 2026

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக இந்திய மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 22 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

24 Feb 2026

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 04 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, கடலோர காவல்படைத் திணைக்களத்துடன் இணைந்து, மன்னார் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 18, அன்று இரவு சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளையும் இருபத்தி இரண்டு (22) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

19 Feb 2026