ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 354 கடல் மைல் (655 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் அனர்த்தத்தில் சிக்கிய கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலைச் சேர்ந்த நான்கு (04) மீனவர்களும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கடற்படையினரால் மீட்கப்பட்டு, இன்று (2025 அக்டோபர் 31) காலை இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.