திருகோணமலை சல்லிமுனை பகுதியில் 2020 செப்டம்பர் 09 அன்று இலங்கை கடற்படை காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்கள் (02) வாட்டர் ஜெல் என்ற வெடிக்கும் சாதனம் மற்றும் பல பாதுகாப்பு உருகிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

">

வெடிபொருள் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்

திருகோணமலை சல்லிமுனை பகுதியில் 2020 செப்டம்பர் 09 அன்று இலங்கை கடற்படை காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்கள் (02) வாட்டர் ஜெல் என்ற வெடிக்கும் சாதனம் மற்றும் பல பாதுகாப்பு உருகிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

திருகோணமலை சல்லிமுனை பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் குச்சவேலி காவல்துறையினர் 50 வாட்டர் ஜெல் குச்சிகள், ஐந்து பாதுகாப்பு உருகிகள், ஒரு மின்சாரம் இல்லாத டெட்டனேட்டர் மற்றும் 2 ½ அடி நீளமான ஒரு வாள் ஆகியதுடன் இரண்டு (02) சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் குச்சவேலி பகுதியில் வசிக்கின்ற, 41 மற்றும் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து குச்சவேலி காவல்துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.