2021 மே 07 அன்று இலங்கையின் வடமேற்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 235 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் சுமார் 522 கிலோகிராம் வெங்காயம் விதைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

">

ரூ .70 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் வெங்காயம் விதைகள் வட மேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2021 மே 07 அன்று இலங்கையின் வடமேற்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 235 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் சுமார் 522 கிலோகிராம் வெங்காயம் விதைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

தற்போதுள்ள கோவிட் 19 தொற்றுநோய் நாட்டில் பரவுவதற்கான அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடல் வழியாக குடியேறுபவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், சட்டவிரொத கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இலங்கை கடற்படை கடல் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அதன் படி கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு அதிக ஆபத்தில் உள்ள வடக்கு மற்றும் வடமேற்கு கடல் பகுதிகள் உட்பட தீவின் கடற்கரைகளில் தொடர்ந்து 24 மணி நேர ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி. 2021 மே 7, அன்று, குதிரமலை கடற்கரையில் மேற்கொண்டுள்ள ஒரு ரோந்து நடவடிக்கையின் போது, 07 இந்தியர்களைக் கொண்ட ஒரு இந்திய மீன்பிடிக் படகு சர்வதேச கடல் எல்லையை (IMBL) மீறி இலங்கை கடலுக்குள் நுழைவதைக் கடற்படையினர் கண்கானித்தனர். மேலதிக விசாரணையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஆறு பைகளில் 118 பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 235 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடற்படையினர் கைப்பற்றிய கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ .70 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அதே நாளில் நீர்கொழும்பு கடற்கரையில் மேற்கொண்டுள்ள மற்றொரு ரோந்து நடவடிக்கையின் போது, கரையை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் குறித்த படகில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 20 பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 522 கிலோகிராம் வெங்காயம் விதைகளுடன் இரண்டு இலங்கை சந்தேக நபர்கள் (02) இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கியுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் கோவிட் 19 வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் கருத்தில் கொண்டு தீ வைத்து அழிக்கப்பட்டதுடன் படகில் இருந்த 07 இந்திய நாட்டினரும் மீண்டும் இந்திய கடல் பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், கடற்படையினரால் கைப்பற்ற வெங்காயம் விதைகள், 02 சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.