46 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2022 செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை நொரொச்சோலை இலந்தடிய பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 155 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் 02 கார்கள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களுடன் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விஜய நிருவனத்தின் கடற்படையினர் நொரொச்சோலை இலந்தடிய பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வீடொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரை அவதானித்து சோதனையிட்ட போது கொண்டு செல்வதற்காக தயார் செய்யப்பட்ட 78 பார்சல்களை கொண்ட கேரள கஞ்சா 155 கிலோ 450 கிராமுடன் 02 சந்தேக நபர்கள் குறித்த கார் வண்டி (01) மற்றும் இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற மற்றொரு கார் (01) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்படி, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் 35 மற்றும் 40 வயதுடைய ராகம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கேரள கஞ்சா மற்றும் வாகனங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரோச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.