சுமார் 04 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2023 ஜனவரி 28 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 12 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் எலார நிறுவனத்தின் கடற்படையினர் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸாருடன் இணைந்து 2023 ஜனவரி 24 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 06 பார்சல்களாக பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா 12 கிலோ 110 கிராம் கைப்பற்றுள்ளனர்.

கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் சட்டவிரோத போதைப்பொருள்களை கடற்கரையில் மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதுடன் இந்த கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு சுமார் ரூ. 4 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.