யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் இருந்து 50 வர்த்தக வெடிபொருள் குச்சிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன

யாழ்ப்பாணம் ஆல்லப்பிட்டி பகுதியில் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 50 வர்த்தக வெடிபொருட்கள், பதினைந்து மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 172 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியினால் கடல்சார் சூழலுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஞ்சதேவ மற்றும் வேலுசுமண நிருவனங்களின் கடற்படையினர் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆல்லப்பிட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடலோரப் பகுதியில் கல் பாறையொன்றின் கீழ் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று மறைத்து வைக்கப்பட்டதை கண்காணித்து ஆய்வு செய்தனர். அப்போது குறித்த பையில் மறைத்து வைத்திருந்த 50 வர்த்தக வெடிபொருட்கள், பதினைந்து மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 172 செ.மீ பாதுகாப்பு உருகிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக இந்த வணிக வெடிபொருட்கள் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது, மேலும் இந்த வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.