இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடிக் படகொன்றுடன் 09 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் வைத்து கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவின் ஊரிமுனை கடற்பகுதியில் 2023 ஜூன் 20 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடிப் படகொன்றுடன் 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி 2023 ஜூன் மாதம் 20 ஆம் திகதி காலை வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தின் கடற்படையனர் சிறிய படகுகளை பயண்படுத்தி நெடுந்தீவின் தென்பகுதி ஊரிமுனை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகொன்று சோதனையிட்டதுடன், அங்கிருந்த ஒன்பது (09) இந்திய மீனவர்களுடன் குறித்த இந்திய மீன்பிடிப் படகைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது, அதன் இயந்திர அறைக்குள் நீர் கசிந்ததால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த இந்திய மீன்பிடிப் படகு குறித்த கடற்பரப்பில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரியவந்ததுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.