சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மன்னாரில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மன்னார், இலுப்புக்கடவாய் களப்பு பகுதியில் 2023 ஜூன் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 92 கிலோகிராமிற்கும் அதிகமான (92) கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அதன்படி, மன்னார் இலுப்புக்கடவாய் களப்பு பகுதியில் 2023 ஜூன் 30 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புவனெக மற்றும் இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அருகில் உள்ள புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 சந்தேகத்திற்கிடமான சாக்குகளை மீட்டதுடன், அதில் 42 கேரள கஞ்சா பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த சுமார் 92 கிலோ 250 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் எனவும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 92 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்பப்படும் வரை கடற்படை பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.