11 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மாமுனை பகுதியில் இன்று (2023 ஜூலை 19) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது முப்பத்தைந்து (35) கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

அதன்படி இன்று (2023 ஜூலை 19) யாழ்ப்பாணம், மாமுனைப் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெத்தலக்கேணி கடற்படை நிலையத்தின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் வீதியொன்றுக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த பதினெட்டு (18) பொதிகள் பரிசோதிக்கப்பட்டதுடன் அங்கு, குறித்த பதினெட்டு (18) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 35 கிலோ 900 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 11 மில்லியன் ரூபாவாகும் எனவும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 35 கிலோ 900 கிராம், கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் காவலில் வைக்கப்பட்டுள்ளது.