75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் 2023 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 227 கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் லொறி வண்டியொன்று (01) கைது செய்தனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி வழங்குகிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தின் கடற்படையினர் வட்டுக்கோடை பொலிஸாருடன் இணைந்து 2023 ஆகஸ்ட் 5 ஆம் திகதி இரவு பொன்னாலை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாகச் சென்ற லொறியொன்றை சோதனையிட்டனர் அப்போது குறித்த லொறியில் (01) நூற்று ஐந்து (105) பார்சல்களில் அடைக்கப்பட்ட 227 கிலோ 915 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் மற்றும் லொறி வண்டி கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு 75 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட 227 கிலோ 915 கிராம் கேரள கஞ்சா சந்தேகநபர் (01) மற்றும் லொறி வண்டி (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.