சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 99 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் புத்தளம் தடாகத்தில் வைத்து கடற்படையினரால் கைது

புத்தளம் தடாகத்தில் மட்டத்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயற்சித்த சுமார் தொண்ணூற்றொன்பது (99) கிலோகிராம் பீடி இலைகளுடன் (ஈரமான) எடை) இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைது செய்யப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் 2023 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இரவு புத்தளம் தடாகத்தில் மட்டத்தீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நிலத்தை நோக்கி பயணிக்கும் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து சோதனை செய்தனர். அங்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மூன்று (03) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 99 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

குறித்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் கல்பிட்டி மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் குறித்த சந்தேக நபர்கள் இருவர் (02) டிங்கி மற்றும் சுமார் தொண்ணூற்றொன்பது (99) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.