கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமாக கொண்டுவர முயற்சித்த பீடி இலைகளின் அளவு 6230 கிலோவைத் தாண்டியுள்ளது

2023 ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ள சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பீடி இலைகளின் (Tendu Leaves) அளவு ஆறாயிரத்து இருநூற்று முப்பது (6230) கிலோகிராமை தாண்டியுள்ளதுடன் ஒன்பது சந்தேக நபர்கள் (09) மற்றும் மூன்று டிங்கி படகுகளும் (03) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடல் வழிகளாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, 2023 ஆகஸ்ட் மாதத்தில், இலங்கை கடற்படை கப்பல்களான விஜய, தம்பபன்னி, களனி, விரைவு நடவடிக்கை படகுகள் படையணி மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் ஆகிய நிருவனங்களின் கடற்படையினர்களால் மேற்கு மற்றும் வடமேற்கு கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஆறாயிரத்து இருநூற்று முப்பது (6230) கிலோ ஐந்நூற்று எழுபது கிராம் பீடி இலைகளுடன் ஒன்பது (09) சந்தேக நபர்களும், மூன்று (03) டிங்கி படகுகளும் இந்த மாதத்தில் மட்டும் கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளன.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஒன்பது (09) சந்தேகநபர்கள், ஆறாயிரத்து இருநூற்று முப்பது (6230) மற்றும் ஐநூற்று எழுபது (570) கிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று (03) டிங்கிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், கடல் வழிகளாக இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு வருவதைத் தடுக்கவும், சட்ட முறைமைக்கு அமைவாக பீடி இலைகளை இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கவும், அரசாங்கத்தின் வரி வருவாயை வலுப்படுத்தவும், கடற்படை தொடர்ந்தும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் கையிருப்பு காரணமாக அரசாங்கத்திற்கு 37 மில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.