சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1236 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

புத்தளம் தளுவ கடற்கரைக்கு அருகில் 2023 செப்டெம்பர் 26 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முரையில் கொண்டு வரப்பட்டு போக்குவரத்திற்காக தயார் செய்யப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் (1236) கெப் வண்டியொன்று (01) மற்றும் லொறி வண்டியொன்று (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் 2023 செப்டெம்பர் 26 ஆம் திகதி இரவு புத்தளம் தலுவ கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான கெப் வண்டி (01) மற்றும் லொறி வண்டி ஒன்று (01) அவதானித்து சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நாற்பது (40) பார்சல்களில் அடைக்கப்பட்டு அந்த வாகனங்களில் போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று முப்பத்தாறு (1236) கிலோகிராம் பீடி இலைகள், கெப் வண்டி (01) லொறி வண்டி ( 01) இரண்டு சந்தேக நபர்களுடன் (02) ) இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கல்பிட்டியை சேர்ந்த 24 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று முப்பத்தாறு கிலோகிராம் (1236), பீடி இலைகள் சந்தேகநபர்கள் (02), கெப் வண்டி (01) மற்றும் லொறி வண்டி (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.