வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகளை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுக்காக தென் மாகாணத்தின் மாத்தறை, அக்குரஸ்ஸ, திஹகொட மற்றும் கம்புறுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு கடற்படையின் நிவாரணக் குழுக்கள் 2023 ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல் அனுப்பப்பட்டதுடன், கடற்படையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (அக்டோபர் 08, 2023) மாத்தறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

நில்வலா ஆறு பெருக்கெடுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்காக 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் கடற்படையின் நடமாடும் சமையலறையுடன் கூடிய அனர்த்த நிவாரண வாகனம் மற்றும் குழுவொன்று அக்குரஸ்ஸ கொடபிட்டிய விகாரையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக மேற்படி விகாரையில் பிக்குகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு சமைத்த உணவு விநியோகம் இன்று (08 ஒக்டோபர் 2023) கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, அக்குரஸ்ஸ கொடபிட்டிய விகாரையில் நிலைகொண்டுள்ள நடமாடும் சமையலறை மற்றும் நிவாரணக் குழுவினர் பொதுமக்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கான பணிகளை கடற்படைத் தளபதி அவதானித்ததுடன், செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்க தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

மேலும், தென் பிராந்தியத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து அதிகபட்ச நிலை மற்றும் தொடர்ச்சியாக வழங்குமாறு தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க உள்ளிட்ட கடற்படை நடவடிக்கைக் குழுக்களுக்கு கடற்படைத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.