15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் தெஹிவளையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து 2023 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) அடங்கிய பார்சலுடன் சந்தேக நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிக்கும் தேசிய லட்சியத்தை அடைவதற்காக, கடற்படை, நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறது. அதன்படி, 2023 செப்டெம்பர் 27ஆம் திகதி மாலை தெஹிவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தின் கடற்படையினர் கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் அதிகாரிகளுடன் இனைந்து குறித்த பகுதியில் அமைந்துள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வீட்டில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 01 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) அடங்கிய பார்சலுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் வீதி பெறுமதி 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுபோவில பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் 01 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.