கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம், வெத்தலக்கேணி பகுதியில் கைது

யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி வத்திராயன் பகுதியில் 2023 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்படிருந்த முப்பத்து நான்கு (34) கிலோகிராம்களுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை நிலைப்படுத்தல் வெத்தலக்கேணி நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி வத்திராயன் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்தப் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் பேரல்களில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினேழு (17) பார்சல்களில் அடைக்கப்பட்ட முப்பத்தி நான்கு (34) கிலோ நானூறு (400) கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு பதின்மூன்று (13) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தலையடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர் (01) மற்றும் முப்பத்து நான்கு (34) கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.