20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான உள்ளூர் கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் திஸ்ஸமஹாராமவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்

இலங்கை கடற்படை, கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கிரிந்த பொலிஸார் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இரவு திஸ்ஸமஹாராம, கிரிந்த போன்ற பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று நான்கு கிலோகிராம்களுக்கு அதிகமான (104) உள்ளூர் கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் (02) மற்றும் ஒரு கெப் (01) ஆகயன கைது செய்யப்பட்டன.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை மற்றும் கடலோர காவல்படை வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் காவன்திஸ்ஸ, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கிரிந்த பொலிஸாரால் 2024 ஜூன் 20 இரவு திஸ்ஸமஹாராம, கிரிந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த கெப் ஒன்றில் (01) பொலித்தீன் பொதிகள் ஏற்றப்பட்டிருந்தமை சோதனையிடப்பட்டது. அங்கு, ஆறு (06) பொலித்தீன் பொதிகளில் 104 கிலோ 815 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் கெப் (01) ஆகியன கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட உள்ளூர் கஞ்சா கையிருப்பின் மொத்த வீதி பெறுமதி இருபது (20) மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், உள்ளூர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 28 வயதுடைய திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கஞ்சா சரக்கு மற்றும் வண்டி (01) கிரிந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.