“Devon 5” பல நாள் மீன்பிடிப் படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை விஜயபாகு கப்பல் முலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது

“Devon 5” பல நாள் மீன்பிடிப் படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் ஒருவரை விஜயபாகு கப்பல் முலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இன்று (2024 ஜூலை 01) கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், பல நாள் மீன்பிடி படகான “Devon 5” இல் ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு (02) மீனவர்கள் 2024 ஜூன் 30 ஆம் திகதி ‘MV KOTA CAMIL’ என்ற வணிகக் கப்பலால் மீட்கப்பட்டனர். குறித்த மீனவர்கள் கரைக்கு கொண்டு வரும் போது ‘MV KOTA CAMIL’ என்ற கப்பலில் ஒரு மீனவர் (01) உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த மற்ற மீனவரை 2024 ஜூன் 30 ஆம் திகதி மாலை தெவுந்தமுனை இருந்து 170 கடல் மைல் (சுமார் 314 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் இருந்து இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபாகு கப்பலுக்கு மாற்றப்பட்டது. இன்று காலை (2024 ஜூலை 01) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.