கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படையினரின் உதவி

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் சுகவீனமடைந்த, இலங்கையில் பல நாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வணிகக் கப்பலொன்று மூலம் மீட்கப்பட்டார். 2024 ஜூலை மாதம் 24 ஆம் திகதி கரைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அவர் மருத்துவ கவனிப்புக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நில்வெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2024 ஜூலை 04 ஆம் திகதி ஆறு (06) மீனவர்களுடன் “Nethum putha 03” (பதிவு எண். IMUL-A- 0843 TLE) என்ற பல நாள் மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர் ஒருவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக மீனவரை கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படைக்கு உதவுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் கொழும்பு கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவித்தது.

இதன்படி, உடனடியாக நடவடிக்கை எடுத்த கடற்படையினர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், அந்த கடற்பகுதியில் பயணித்த ‘MT Lijmiliya’ என்ற வெளிநாட்டுக் கப்பலுக்கு, இலங்கை மீன்பிடி படகில் இருந்த மீனவரை மீட்பதற்கு உதவுமாறு அறிவித்தது. அதன்படி, நோய்வாய்ப்பட்ட மீனவரை கப்பலில் ஏற்றிச் சென்று அவருக்கு அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்டு, இன்று (2024 ஜூலை 24,) அதிகாலை காலி துறைமுகத்திற்கு அருகில் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர், தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவு தாக்குதல் படகொன்று காலி கடல் ரோந்து எல்லைக்கு (OPL) அனுப்பி வைத்தனர், அங்கு அவர்கள் நோய்வாய்ப்பட்ட மீனவரை ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து, அவர் மருத்துவ கவனிப்புக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கையைச் சேர்ந்த கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் துன்பத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து தயாராக உள்ளது.