சுமார் 82 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 ஆகஸ்ட் 04 ஆம் திகதி கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தீவில் உள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருநூற்று ஏழு (207) கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்குச் சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு கடற்படை கட்டளை வழங்கிய தகவலின் படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிறுவனத்தின் கடற்படையினர் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் வீரர்களுடன் இணைந்து 2024 ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கிளிநொச்சி, இரணைதீவு கடற்பகுதியில் மேற்கொன்டுள்ள இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தீவிலுள்ள புதறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஆறு (06) பைகள் அவதானித்து சோதனையிடப்பட்டதுடன் அங்கு, தொண்ணூற்றொன்பது (99) பைகளில் பொதி செய்யப்பட்ட 207 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி எண்பத்திரண்டு (82) மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.