வடக்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகில் இருந்த 02 மீனவர்களை கடற்படையினரால் மீட்கப்பட்டது

இலங்கைக்கு வடக்கு பகுதியில் கச்சத்தீவில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 14 கி.மீ) தொலைவில் இந்திய கடற்பரப்பில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்றில் இருந்து 02 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (27 ஆகஸ்ட் 2024) மீட்டுள்ளனர்.

கச்சத்தீவில் உள்ள இலங்கை கடற்படை இணைப்பில் கடற்படையினர் குறித்த தீவு பகுதியில் இன்று ( 2024 ஆகஸ்ட் 27) காலை மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது நீந்திக் கரைக்கு வந்த ஒருவரை அவதானித்தனர். குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் இந்திய மீனவரொருவர் என்பதை தெரியவந்துள்ளதுடன், நான்கு (04) மீனவர்களை கொண்ட தனது மீன்பிடிப் படகு, மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடல் சீற்றம் காரணமாக கடலில் கவிழ்ந்ததால் கச்சத்தீவு நோக்கி நீந்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, விரைவாக பதிலளித்த கடற்படையினர், கச்சத்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை தேடும் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படை படகுகளை அனுப்பியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, கடற்படையினர் மற்றொரு இந்திய மீனவரை (01)மீட்டனர்.

கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கச்சத்தீவு கடற்பகுதியில் கடல் நிலைமை சவாலான போதிலும், எஞ்சிய இரண்டு (02) இந்திய மீனவர்களை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

மேலும், இது தொடர்பான மேலதிகப் பணிகளுக்காக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இந்தியாவின் சென்னை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்குத் தகவல் அளித்துள்ளது.