சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் கரம்ப பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிசார் இணைந்து 2024 ஆகஸ்ட் 27 ஆம் திகதி புத்தளம் கரம்ப பகுதியில் உள்ள வீதித் தடுப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கெப் வண்டி மூலம் சாதனங்களை கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கறம்ப சந்தி வீதித்தடையில், நொரோச்சோலை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான பொலிரோ வண்டியொன்று அவதானிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதுடன் அந்த வண்டியில் ஏற்றிச் சென்ற சுங்கச் சட்டத்தை மீறி இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அறுநூற்று ஐம்பது (650) கையடக்கத் தொலைபேசிகளுடன், சந்தேக நபர் (01) மற்றும் குறித்த வண்டி (01) கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் 650 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கெப் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரோச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.